✨நியூட்ரிஷன் உருண்டை
💠தேவையான பொருள்கள்
🔹பேரீச்சம்பழம் – 50 கிராம்
🔹பாதாம் – 10
🔹வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
🔹எள் – 2 தேக்கரண்டி
🔹சர்க்கரை – 4 தேக்கரண்டி
🔹நெய் – சிறிது
♦️செய்முறை:
✴️பேரீச்சையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
✴️மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
✴️வெறும் வாணலியில் பாதாம் மற்றும் வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும்.
✴️மிக்ஸியில் சர்க்கரையை போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
✴️பிறகு மிக்ஸியில் பருப்பு வகைகளை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடித்த சர்க்கரை, பொடியாக நறுக்கிய பேரீச்சை, எள்ளு மற்றும் நெய் சேர்க்கவும்.
✴️எல்லாவற்றையும் சேர்த்ததும் நன்றாக ஒன்றுடன் ஒன்று சேரும்படி கலந்துக் கொள்ளவும்.
✴️பருப்பு, பேரீச்சை கலவையை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
✴️குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான நியூட்ரிஷன் உருண்டை தயார்.