✨ஆந்திரா பருப்புப்பொடி
♦️தேவையான பொருட்கள் :
✴️துவரம்பருப்பு – ஒரு கப்
✴️பொட்டுக்கடலை – 1/2 கப்
✴️உப்பு தேவையான அளவு
✴️பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
✴️பூண்டு – 8 பல்
✴️சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
✴️வரமிளகாய் – 9
✴️கறிவேப்பிலை சிறிதளவு
♦️செய்முறை:
🍲ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
🍲பிறகு எண்ணெய் இல்லாமல் துவரம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
🍲துவரம்பருப்பு வதங்கிய பின்பு பொட்டுக்கடலையை போட்டு வறுக்கவும்.
🍲சீரகம் போட்டு வதக்கவும்.
🍲சீரகம் வறுத்த பின்பு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
🍲அனைத்தும் வறுத்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்க்கவும்.
🍲வறுத்த பொருட்களை சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
🍲பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
🍲அனைத்தும் சேர்த்த பின்பு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
🍲காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி தயார்.
#பகிர்வு