✨பரோட்டா குருமா
💠தேவையான பொருட்கள்:
🔹காரட் – 100 கிராம்
🔹பீன்ஸ் – 100 கிராம்
🔹பச்சைபட்டாணி – 100 கிராம்
🔹உருளை கிழங்கு – 2
🔹வெங்காயம் – 2 பெரியது
🔹தக்காளி – ஒன்று நறுக்கியது
🔹கறிவேப்பிலை – சிறிதளவு
🔹தேங்காய் – ஒரு மூடி
🔹கிராம்பு – 2
🔹பட்டை – சிறிதளவு
🔹மல்லிதூள் – 2 தேக்கரண்டி
🔹மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
🔹இஞ்சி – அரை தேக்கரண்டி
🔹பூண்டு – அரை தேக்கரண்டி
🔹எண்ணெய் – தேவையான அளவு
🔹தண்ணீர் – தேவையான அளவு
🔹உப்பு – தேவையான அளவு
💠செய்முறை:
🔸காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
🔸இதனுடன் பச்சைபட்டாணி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
🔸துருவிய தேங்காயை அரைத்து கொள்ளவும்.
🔸வாணலியில் வதக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
🔸பிறகு மல்லித்தூள், மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
🔸அத்துடன் வேக வைத்த காயை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
🔸பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.