💠ரவா இட்லி
✴️தேவையான பொருட்கள்:
🔹ரவை – 1 கப்
🔹எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன்
🔹கடுகு – சிறிதளவு
🔹உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
🔹கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
🔹இஞ்சி – 1 துண்டு
🔹பச்சை மிளகாய் – 2
🔹கருவேப்பிலை – சிறிதளவு
🔹வெங்காயம் – 1/2 கப்
🔹தயிர் – 1/2 கப்
🔹உப்பு – தேவையான அளவு
🔹பேக்கிங் சோடா -சிறிதளவு
🔹கொத்தமல்லி – சிறிதளவு
✴️செய்முறை:
🔸முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு அதனுடன் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து கிளறவும்.
🔸பிறகு இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை எடுத்து பொடியாக நறுக்கி அதனுடன் கலந்து கொள்ள வேண்டும்.
🔸பிறகு அதில் வெங்காயத்தினை கொட்டி கிளறி மேலும் அதனுடன் ரவை கொட்டி மிதமான சூட்டில் நன்றாக 2 நிமிடம் வரை வறுக்கவும்.
🔸வறுபட்டவுடன் அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
🔸ரவை ஆறியதும் அதனுடன் கெட்டியான தயிர் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும்.
🔸பிறகு 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
🔸15 நிமிடங்கள் கழித்து அதில் உப்பு, பேக்கிங் சோடா மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
🔸பிறகு ஊறிய ரவையினை இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி 10 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான ரவா இட்லி தயார்.