அறுசுவை அட்டில் : தேங்காய் பால் குருமா

by Admin 4
1 views

வெஜிடபிள் குருமா

♦️தேவையான பொருட்கள்:

🔹கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி – 1 1/2 கப்

🔹நெய்/எண்ணெய் – 3 தேக்கரண்டி

🔹பெருஞ்சீரகம் – 3/4 தேக்கரண்டி

🔹ஏலக்காய் – தலா 3

🔹கிராம்பு – தலா 3

🔹பட்டை – தலா 3

🔹வெங்காயம் – 1

🔹பச்சை மிளகாய் – 3

🔹தக்காளி – 1

🔹புதினா – 10 இலைகள்

🔹தேங்காய் துருவல் – 1 கப்

🔹ஊறவைத்த முந்திரிப்பருப்பு – 10

♦️செய்முறை:

🔸முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

🔸பிறகு நெய்யை காயவைத்து அதில் பெருஞ்சீரகம் சேர்த்து வெடித்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கி நன்கு வாசனை வந்ததும் வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

🔸அதனுடன் தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும்.

🔸அதன் பின் தேங்காய் துருவலையும், முந்திரிப்பருப்பையும் மையாக அரைத்து ஊற்றவும்.

🔸குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!