அறுசுவை அட்டில் : சாக்லேட் பர்பி

by Admin 4
40 views

✴️சாக்லேட் பர்பி

தேவையான பொருட்கள்:

🔻1/4 கப் நெய்

🔻3/4 கப் பால்

🔻2 1/2 கப் பால் பவுடர்

🔻1/2 கப் சக்கரை

🔻¼ தேக்கரண்டி ஏலக்காய் பவுடர்

🔻2 மேஜைகரண்டி பாதாம் துண்டுகள்

🔻2 மேஜைகரண்டி கோகோ பவுடர்

செய்முறை:

🔹தேவையான பொருட்களை சேகரிக்க.

🔹சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.

🔹 மேஜை கரண்டி கொதிநீரில் குங்குமப்பூ கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

🔹ஒரு கிண்ணத்தில் பால் பவுடர், பால், சக்கரை சேர்த்து விஸ்க் கலந்து கொள்ளுங்கள், லம்பஸ் இருக்க கூடாது.

🔹குறைந்த நெருப்பின் மேல் நான் ஸ்டிக் கடாய் வைக்க.

🔹நெய் சேர்த்து பால் கலவை சேர்க்க.

🔹கிளறிக்கொண்டே இருக்க.

🔹குங்குமப்பூ, ஏலக்காய் சேர்க்க.

🔹கைவிடாமல் கிளறுக.

🔹சில நிமிடங்களில் கெட்டியாகும்.

🔹ஸ்மூத் ஆக இருக்க வேண்டும், லம்பஸ் கூடாது.

🔹கலவை கெட்டியாகி உருண்டு வரும்.

🔹சுருண்டு ஓரங்களில் இருந்து பிரிந்து வரும்.

🔹அடுப்பை அணைக்க.

🔹கலவையை 2 ஆக பிரிக்க.

🔹ஒரு பாக்ஸில் பார்ச்மென்ட் பேப்பர் லைன் செய்க.

🔹ஓரு பாதி கலவை எடுத்து இதில் போட்டு ஸ்பேடுலாவால் அழுத்தி வேண்டிய அளவு திக்னஸ் சமம் செய்க.

🔹ஓரங்களை டிரிம் செய்க.

சாக்லேட் லேயர் :

🔸குறைந்த நெருப்பின் மேல் கடாயில் இருக்கும் கலவையுடன் கோகோ பவுடர் சேர்த்து 2 நிமிடம் மிக்ஸ் செய்க.

🔸கோகோ கலவையை, பாக்ஸில் இருக்கும் பால் கலவை மீது லேயர் செய்க.

🔸மெல்ல அழுத்தி சமம் செய்க.

You may also like

Leave a Comment

error: Content is protected !!