அறுசுவை அட்டில் : மசாலா ப்ரெட்

by Admin 4
35 views

மசாலா பிரெட்

♦️தேவையானவை:

💠பிரெட் ஸ்லைஸ் – 10 (ஓரங்களை நீக்கவும்)

💠கேரட் துருவல் – அரை கப்

💠குடைமிளகாய்,  வெங்காயம், முட்டைகோஸ் – தலா அரை கப்

💠தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

💠மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

💠சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

💠டொமேடோ கெட்சப் – ஒரு டேபிள்ஸ்பூன்

💠பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,  

💠பச்சை மிளகாய் – சிறிதளவு

💠வெண்ணெய்

💠எண்ணெய்

💠உப்பு – தேவையான அளவு  

♦️செய்முறை:

✴️வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, கேரட் துருவல்,  குடமிளகாய், முட்டைகோஸ்,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.  

✴️அதனுடன் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், டொமேட்டோ கெட்சப், உப்பு சேர்த்து வதக்கவும்.

✴️பிறகு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

✴️பிரெட்டின் மீது சிறிதளவு வெண்ணெய் தடவவும்.

✴️தோசைக்கல்லைக் காயவைத்து பிரெட்டைப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

✴️அதன் மீது காய்கறிக் கலவையைப் பரப்பி பரிமாறவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!