✴️பிரெஞ்ச் டோஸ்ட் செய்வது எப்படி?
🔴தேவையான பொருட்கள்:
🔹பிரெட் – 10
🔹முட்டை – 2
🔹பால் – 1/2 கப்
🔹சீனி – 4 மேசைக்கரண்டி + தேவைக்கேற்ப
🔹வெண்ணெய் அல்லது நெய் – தேவைக்கேற்ப
🔴செய்முறை:
🔸ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனியும் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.
🔸தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் இட்டு, பிரெட் துண்டுகளை ஒவ்வொன்றாக முட்டையில் தோய்த்து, தோசைக்கல்லில் போட்டு வெந்தும் திருப்பி போட்டு இருபக்கமும் மொறு மொறு என்று சுட்டெடுக்கவும்.
#பகிர்வு