“இந்த மாசம் நடக்க போறது பெரிய இடத்துல சோ இயன்றளவு நடிப்ப வெளிபடுத்தனும் புரியுதா, பெரிய பெரிய தயாரிப்பாளர்கள், டிரக்டர்ஸ் வர வாய்ப்பிருக்கு கவனமா இருக்கனும் டெய்லி Practice பண்ணணும் புரியுதா”
“ஆமா சார் கண்டிப்பா நல்லா பண்ணுவோம் சார்” என்றனர்.
“சத்யா கொஞ்சம் உள்ள வா” என்றார் தேவா.
♦தேவா ஒரு பெரிய நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வருகிறான். பல இடங்களில் பாராட்டுக்களை பெற்று இருக்கின்றது இவர்களின் நாடகங்கள். இந்த மாத இறுதியில் பெரிய நிறுவனம் ஒன்று நாடகத்துக்காக இவர்களை அழைத்து இருக்கிறார்கள் அதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இதில் சத்யா பல நாடகங்களில் ஹீரோவாக நடித்து வருகிறான்.♦
அதுமட்டுமில்லாமல் சில நாடகங்களுக்கு இவனே கதையும் எழுதுவான்.
“சொல்லுங்க சார்”
“நான் சொன்ன கதையை பண்ணலாம்தான”
“பண்ணலாம்தான் ஆனா சார்”
“என்ன சத்யா சொல்லு”
“உண்மையா ரெண்டு பேரும் காதலிச்சிட்டு பிரிஞ்சி போறத ஏத்துக் கொள்வாங்களா சார்”
“சத்யா காதல் எல்லாருக்கும் வெற்றியை கொடுக்காது அதுதான் காதலின் விதி”
“என்னவோ சொல்றிங்க பண்ணிடலாம், ஒரு சின்ன மாற்றம் செஞ்சா எப்படி இருக்கும்”
“என்ன மாற்றம்”
“ஹீரோ காதல் சொல்லும் போது ஒரு பாட்டுல சொல்றான்”
“ஆமா அதுவும் நல்லாதான் இருக்கும், நீதான் எழுதுவியே எழுதி கொண்டு வா பாக்கலாம்”
“ஓகே சார்” என்று வெளியே சென்றான்.
சில நிமிடங்களில் தேவா வந்தான்.
“சத்யா மீனா இன்னும் வரலயா”
“இன்னும் இல்ல சார்”
சில நிமிடங்களில் மீனாவும் வந்தாள்.
♦மீனா பணக்கார வீட்டு பொண்ணு வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் நடிப்பதில் ஆர்வம் உள்ளதால் இந்த நாடகக் கம்பனியில் நடிப்பு கற்று வருவதோடு சில நாடகங்களிலும் நடித்து இருக்கிறாள்.♦
“என்ன மீனா லேட் ஆகிட்டிங்க” என்றான் சத்யா.
“வரும் போது சின்ன சாப்பிங் ஒன்னு போனன் அதுதான் லேட் ஆகிட்டு”
♦மீனா இந்த கம்பனியில் சேர்ந்ததிலிருந்து சத்யாவும் மீனாவும் நல்ல நண்பர்களாக இருக்கின்றார்கள்♦
“சரி ரெடி ஆகிட்டு வா ரிகர்சல் பாக்கனும்” என்றான் தேவா.
எல்லோரும் ஆயத்தம் ஆகி வந்தார்கள்.
“சார் பாட்டு எழுதிட்டன் சொந்த ட்யூன் ரெடி பண்ணியிருக்கன்”
“எப்படிடா அதுக்குள்ள”
“சும்மா இருக்குற நேரத்துல Try பண்ணி பாக்குறது சார் அதுல ஒரு ட்வூன் எடுத்து அதுக்கு ஏத்த மாதிரி எழுதிட்டன்”
“ம்ம்ம் வெரி குட், மலர் இங்க வந்து நில்லு மத்தவங்க அவங்க அவங்க இடத்துல நில்லுங்க, சத்யா ரெடியா”
“ரெடி சார்”
“ஆக்ஷன்”
“மலர்..! காதலுக்கு அர்த்தம் தெரியாம இத்தன நாளா இருந்துட்டன் ஆனா எப்ப உன் கைய தொட்டு உன் கண்கள பார்த்தேனோ”
“கட்..! கட்..! என்ன சத்யா..! அந்த பீல் முகத்துல இல்ல, மலர் உனக்கும்தான் முகத்துல அந்த முகபாவனை இல்ல”
பலமுறை செய்தும் தேவாவுக்கு பிடிக்கவில்லை.
“மீனா இங்க வா..! சத்யா ரெடி ஆக்ஷன்”
“மீனா காதலுக்கு அர்த்தம் தெரியாம இவ்வளவு நாளா இருந்துட்டன், எப்ப உன்னட கைய பிடிச்சி உன் கண்களை பார்த்தேனோ அப்பவே இதயத்துல ஏதோ ராகம் வந்து பாடுது.
♥உன் கைகள் தீண்டலில்
என் இதயம் பேசுதே…!
உன் கயல்விழி பார்வையில்
பல கவிகள் தோன்றுதே…!
காதல் கண்டேன் எனக்குள்ளே
மௌனம் கலைந்தேன் உனக்குள்ளே..!
சொல்லி தீராக் காதல் இது
இரு இதயம் பேசும் உண்மைக்காதல் இது♥
“வாவ் வெல்டன் சத்யா, மீனா பின்னிட்ட கொஞ்ச நேரத்துல மெய் மறக்க வச்சிடிங்க வெல்டன், இந்த நாடகத்துல மீனாதான் ஹீரோயின்” என்றான் தேவா.
எல்லோரும் வீட்டிற்குச் சென்றார்கள்.
இரவானது
“என்ன ஆச்சி சத்யா…! என்னைக்கும் இல்லாத ஒரு பீல் ஒன்னுமே புரியல, என்னாச்சி…! இவ்வளோ நாள் மீனா கூட பழகுறன் பேசுறன் இப்படியான உணர்வு வந்தது இல்லையே” என்று உருண்டு புரண்டு உறங்கினான்.
மறுநாள் சத்யா வந்து சில நிமிடங்களில் மீனாவும் வந்தாள்.
ஆனால் அவள் பார்வையில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது என்றும் இல்லாத வித்தியாசம். சத்யா அவள் கண்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
மீனாவும் அருகில் வந்தாள். சத்யாவுக்கு இன்றுதான் அவள் முதல் முதலாக அருகில் வருவதாக ஒரு எண்ணம்.
“சத்யா..! கொஞ்சம் பேசனும்”
“நானும்தான் மீனா” இருவர் குரலிலும் ஏதோ தடுமாற்றம்.
“மீனா வழமையா எப்போதும் மாதிரி பேசுறன் பழகுறன் நேத்துல இருந்து என்னமோ தெரியல ஒரு வித்தியாசமான பீலிங்”
“ஆமா சத்யா எனக்கும் அப்படிதான் சத்யா இருந்துச்சி, உங்க மேல ஒரு Cursh இருந்துச்சினு சொல்லலாம் ஆனா இப்ப”
“இப்ப என்ன சொல்லுங்க” என்றதும் வெட்கத்தில் தலைகுனிந்தாள்.
“மீனா I Love you” என்றான் சத்யா.
மீனாவின் சந்தோசத்துக்கு எல்லையில்லாமல் போய்விட்டது.
சில நிமிடங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க எல்லோரும் வந்தார்கள்.
“ஹாய்..! சத்யா மீனா இப்பதான் வந்திங்களா”
“ஆமா” தேவாவும் வந்தான்.
வேறொரு நாடகத்திற்கான ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“இது பத்தி யாருக்கிட்டையும் இப்ப சொல்லிட வேணாம் அந்த பெரிய நாடகம் முடிஞ்ச அப்புறம் சொல்லலாம் சப்ரைஸா இருக்கும்” என்றான் சத்யா. மீனாவும் தலையாட்டினாள்.
அதன் பிறகு காதலர்களாக சந்தோசமாக இருந்தார்கள்.
மீனா வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் வாரத்தில் இரண்டு நாட்கள் சத்யாவோடு வெளியே சென்று சாப்பிடுவது, பீச் செல்வது போன்று வழக்கமாக கொண்டிருந்தாள்.
சில நாட்கள் சென்றன.
“மீனா உனக்கு அப்பா மாப்புள பாத்திருக்காரு போட்டோ அனுப்பி இருக்காரு பாரு” என்று தனது போனை காட்டினாள்.
மீனா தடுமாறியவாறு,
“அம்மா இப்ப என்ன அவசரம் கல்யாணத்துக்கு எனக்கு பிடிக்கல”
“ஏன்டி என்னாச்சி உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையா? இல்ல இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?”
“அம்மா…! நான் ஒருத்தர லவ் பண்றன் அம்மா”
“என்னது லவ்வா? அப்பாக்கு தெரிஞ்சிது கொன்னு போட்டுடுவாறு”
“அம்மா ரொம்ப நல்லவருமா அந்த நாடக கம்பனிலதான் வேல பாக்குறாரு”
“இதுக்குதான் அன்னைக்கே சொன்னன் இந்த நடிப்பு எல்லாம் தேவையில்லனு கேட்டியா?” திடிரென அப்பா உள்ளே வந்தார்.
இருவரும் விழி பிதுங்கி நின்றனர்.
“என்னாச்சி எதுக்கு இப்படி முழிக்கிறிங்க என்னம்மா…! அம்மா போட்டோ காட்டினாளா? இந்த மாசம் கல்யாணம் பிக்ஸ் பண்ண போறன்”
“ஏங்க அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லயாம்”
“ஏன் என்னாச்சி? என்னட ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி சம்மந்தம் அமைஞ்சி இருக்கு இது மாதிரி வேற யாருக்கும் அமையாது”
“அவ லவ் பண்றாளாம் அதுவும் நாடக கம்பனில உள்ளவன” அப்பா உடனே சிரித்தார்.
அதை பார்த்த சந்தோசத்தில் மீனா,
“அப்பா ரொம்ப அவரு ரொம்ப நல்லவரு அப்பா”
“ஓ அப்படியா…! சொத்து எவ்வளோ இருக்கும், மாசம் என்ன சம்பளம், வீடு பெரிய வீடா”
“அப்பா”
“என்னடா இப்படி கேக்குறானேனு பாக்குறியா, இங்க பாரு மீனா எல்லாரும் சொல்ற மாதிரி மனசுதான் முக்கியம் பணம் முக்கியமில்லனு நீ சொல்லாத,
எல்லாரும் கேக்குற மாதிரி நானும் கேக்குறன் மனச வச்சி ஒரு கிலோ அரிசி வாங்க முடியுமா? இல்ல தலைவலிக்கு மருந்து வாங்க முடியுமா? Practicalலா யோசிம்மா. உனக்கு காருக்கு பெட்ரோல், ட்ரஸ், சாப்பாடு, குளிக்கிற சாம்போ இத வாங்க அவன் 5 மாசம் உழைக்கனும்,
ஏழை பணக்காரனா வாழலாம்
ஆனா பணக்காரனா இருந்துட்டு ஏழையா வாழ்றது ரொம்ப கஷ்டம் மீனா, நீ யோசிச்சி பாரு அப்பா சொல்றது சரியா தவறானு”
“அப்பா எனக்கு அவரதான் புடிச்சி இருக்கு” உடனே மீனாவின் கன்னத்தில் அறைந்தார்.
“என்ன உன்னட அப்பா யாருனு மறந்துட்டியா? இப்ப நான் சொன்னது உன்னட மனச ஆறுதல் படுத்தி புரிய வைக்க, இப்ப அடிச்சது இந்த மாசம் உனக்கு கல்யாணம் இவன்தான் மாப்ள, ஏய் அவள்ட்ட இருந்து Phoneன வாங்கி வைடி” என்று சொல்லி சென்றார்.
“இங்க பாரு மீனா நான் அடிச்சி இருப்பன் அப்பா அடிச்சிட்டாரு, பணம் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது நல்லா வாழ பணம் வேணும், இல்லனா சந்தோசமும் இருக்காது போய் யோசி போ” என்று போனை பறித்து ஆப் செய்து தனது அறையில் வைத்துக் கொண்டாள்.
இரண்டு நாட்கள் சென்றன.
சத்யா போன் செய்து பார்த்தான் போன் ஆப் ஆகி இருந்தது என்ன ஆச்சி எதுவுமே தெரியவில்லை.
“சத்யா மீனாவுக்கு என்னாச்சி எதுவுமே சொல்ல இல்ல வரவும் இல்ல, அவங்க வீட்டுக்கெல்லாம் போக முடியாது, அவள்ட அப்பாட்ட அப்பாய்மன்ட் இல்லாம பேசவே முடியாது இன்னும் 10 நாள்தான் இருக்கு நாடகத்துக்கு” என்று தலையில் கைவைத்து அமர்ந்தான் தேவா.
சில நொடியில்,
“மலர் இங்க வா நீதான் ஹீரோயின் மீனா எப்படி நடிச்சானு தெரியும்ல”
“ம்ம்ம் சார்”
“சத்யா வா..! மலர்தான் ஹீரோயின்”
5 நாட்களுக்கு பிறகு,
“மீனா அங்கே வந்தாள்” சத்யா ஓடி வந்தான்.
“மீனா…! மீனா…! என்னாச்சி” அவள் எதுவும் பேசாமல் தேவா அறைக்கு சென்று திருமண அழைப்பிதழை கொடுத்தாள்.
“மீனா என்ன இது திடீர்னு எதுவுமே சொல்ல இல்ல, எவ்வளோ கஷ்டம் தெரியுமா இங்க”
“சார் கல்யாணத்துக்கு வாங்க” என்று லேசாக சிரித்தப்படி சென்றாள்.
உடனே வெளியே சென்று மீனாவின் கையை பிடித்து,
“மீனா என்னாச்சி” கையை தட்டி விட்டு
“3 நாள்ள எனக்கு கல்யாணம் இஷ்டம்னா வா இல்லனா வராத” சத்யாவுக்கு கண் கலங்கியது.
“மீனா”
“இங்க பாரு சத்யா, வெறும் காதல வச்சி ஒன்னும் பண்ண முடியாது பணம்தான் முக்கியம், பல தடவ யோசிச்சிதான் முடிவு பண்ணியிருக்கன் அவ்வளோதான்”
“மீனா நாங்க பழகினது லவ் பண்ணது எல்லாமே”
“நீதான் நடிகனாச்சே…! நடிப்புனு மறந்துடு” என்று சொல்லி சென்றாள்.
சில நாட்களில் அவளுக்கும் திருமணம் முடிந்தது.
அன்று நாடக அரங்கேற்றம் நடக்கும் நாள் அதிகமானவர்கள் வந்திருந்தார்கள். மீனாவும் தனது கணவனோடு வந்திருந்தாள்.
நாடகம் ஆரம்பமானது,
நாடகத்தின் இறுதியில் காதல் செய்த பெண்ணுக்கு வேறொருவனோடு திருமணம் நடக்கும் அந்த இடத்தில் கண்ணீரோடு வெளியே செல்ல வேண்டும்.
ஆனால் சத்யா,
பாட ஆரம்பித்தான்.
“என்னாச்சி இவனுக்கு இந்த சீன்ல பாட்டு இல்லையே” என்று டென்சனாக ஆடியன்ஸை பார்த்துக் கொண்டிருந்தான்.
♥உன் கைகள் தீண்டலில்
என் இதயம் துடிக்கவில்லையடி…!
உன் கயல்விழி பார்வையில்
என் கவிகள் இறந்து போனதடி …!
காதலை கொன்றேன் எனக்குள்ளே
மௌனம் சூழ்ந்தது உனக்குள்ளே..!
சொல்லி தீராக் காதல் இது
இரு இதயம் பேசும் ஊமைக்காதல் இது…!
உன் காதல் போதுமடி♥
என்று கண்ணீரோடு பாடி முடித்தான். ஆடியன்ஸ் கைகள் தட்டி பாராட்டினார்கள் மீனாவின் கண்களும் ஈரமானது.
கீழே இறங்கி அறைக்குள் சென்றான் சத்யா.
“டேய் சத்யா” என்று தோளை தட்டினான் தேவா.
சத்யா நிமிர்ந்தான் கண்களில் கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது.
சத்யாவும் நடந்தவற்றை கூறினான்.
“சத்யா காதல் எல்லாருக்கும் வரும், ஆனா சூழ்நிலைய பொருத்து சில காதல் வாழும், பல காதல் செத்துரும்டா” என்று தோளைத் தட்டிச் சென்றான்.
வணக்கம்
-ரபிஸ் மொஹமட்-