தேவையான பொருட்கள்
- ஆறு உருளை கிழங்குகள்
- மோசரெல்லா சீஸ் – 150 கிராம்
- மயோனிஸ் – 1 கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கருப்பு மிளகு – தேவையான அளவு
- கேரட்ஸ் – தேவையான அளவு பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்
- ஊசி மிளகாய் – 2 (பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்)
செய்முறை
- ஆறு உருளை கிழங்குகளை சுத்தப்படுத்தி நன்றாக வேக வைத்திட வேண்டும்.
- பின்னர், அதன் தோல்களை நீக்கி அவைகளை மைய பிசைந்து ஒரு ஓரமாய் வைத்துக் கொள்ளவும்.
- பின்னர், மோசரெல்லா சீஸ், மாயோனிஸ், கருப்பு மிளகு தூள், கேரட்ஸ், பச்சை மிளகாய்கள் மற்றும் உப்பு அனைத்தையும் ஒன்றாக போட்டு கிளரிடவும்.
- பிறகு, வட்ட வடிவமான அலுமினிய பேக்கிங் ட்ரெயில் மசித்த உருளைக்கிழங்குகளை பாதியாக மட்டுமே நிரப்பிட வேண்டும்.
- பின்னர், கிளறிய மோசரெல்லா சீஸ் கலவையை மசித்த உருளைக்கிழங்கு வடிவத்தில் நிரப்பிட வேண்டும்.
- இல்லையேல், கண்ணாடியிலான ஒரு முழு நீள பேக்கிங் ட்ரெயில் மசித்த உருளைக்கிழங்குகளை ஒரு லேயராக மட்டுமே நிரப்பிட வேண்டும்.
- பின்னர், மோசரெல்லா சீஸ் கலவையை அதன் மீது இரண்டாவது லேயராகவும் அதைத் தொடர்ந்து மீண்டும் மசித்த உருளையை மூன்றாவது லேயராகவும் நிரப்பிட வேண்டும்.
- இறுதியாக, ஓவனில் ட்ரேயை பேக் செய்திட செட் செய்திட வேண்டும்.
- சீஸ் கரையும் வரை பொறுத்திருந்து பின்னர் அதை சுடசுட அனைவருக்கும் பரிமாறிடலாம்.