ஆம், சோம்பலேதான். மூளைச்சோம்பல், உளச்சோம்பல், ஆன்மாவின் சோம்பல். ஆன்மிகமான ஒரு வகை பக்கவாதம் அது.
நோயுற்றவர் முயன்று தன்னை விடுவித்துக்கொண்டால்தான் உண்டு. ஒருவர் சலிப்பில் இருந்து நோயில் இருந்து வெளியேவர இன்னொருவரை எதிர்பார்க்கிறார் என்றால் அவர் வெளிவரப்போவதே இல்லை.
தனக்குத்தானே அடையப்படுவன மட்டுமே நமக்கு மெய்யாகவே உரியவை.