மெரினெட் செய்ய தேவைப்படும் பொருட்கள்
- கோழி இறைச்சி – துண்டுப்போடப்பட்டது
- தண்ணீர் – தேவையான அளவு
- ஒய்ஸ்டர் சார்ஸ் / சோயா சோர்ஸ் – தேவையான அளவு
- வெள்ளை மிளகுத்தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- சோள மாவு – தேவையான அளவு
- முட்டை – வெள்ளை கரு மட்டும்
மெரினெட் செய்யும் முறை
- பௌலில் எல்லா பொருட்களையும் ஒன்றாக கொட்டி கிளறிடவும்.
- பின்னர், வெட்டிய கோழி இறைச்சித் துண்டுகளை அதில் போட்டு நன்றாக கிண்டிடவும்.
- குளிர்சாதன பெட்டியில் 30 நிமிடங்களுக்கு கலவையிலான கோழியை ஊற வைத்திட வேண்டும்.
- நிமிடங்கள் கடந்த பிறகு, மெரினெட் செய்யப்பட்ட கோழியை சோள மாவில் ஒற்றியெடுத்து பொன்னிறமாக வரும் வரை பொரித்திட வேண்டும்.
- எல்லாத் துண்டுகளையும் பொரித்த பிறகு மீண்டுமொருமுறை அடுப்பில் கொஞ்சமாய் எண்ணெய் ஊற்றி பொரித்த அத்தனை கோழிகளையும் மொத்தமாய் அதில் கொட்டி மூன்று நிமிடங்களுக்கு வறுத்தெடுக்க வேண்டும்.
- கடைசியாக, பொரித்த கோழிகளை எண்ணெய் வடிய ஓரம் வைத்திட வேண்டும்.
பட்டர் செய்ய தேவைப்படும் பொருட்கள்
- சீசமே எண்ணெய் – தேவையான அளவு
- பட்டர் – 1/4 கரண்டி
- பெருஞ்சீரகம் – 1/4 கரண்டி (இடித்துக் கொள்ள வேண்டும்)
- சிறுசீரகம் – 1/4 கரண்டி (இடித்துக் கொள்ள வேண்டும்)
- இஞ்சி – சிறிய துண்டு (இடித்துக் கொள்ள வேண்டும்)
- பூண்டு – ஐந்து பல் (இடித்துக் கொள்ள வேண்டும்)
- வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ள வேண்டும்)
- ஊசி மிளகாய் – 5 (பொடிசாக நறுக்கிக் கொள்ள வேண்டும்)
- தக்காளி – 1 (வெட்டிக் கொள்ள வேண்டும்)
- கறிவேப்பிலை – 1 கொத்து
- சீனி – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- எவப்போரேட் பால் – தேவையான அளவு
- சோள மாவு கரைச்சல் – தேவையான அளவு
பட்டர் செய்யும் முறை
- மிதமான அடுப்பு சூட்டில் எண்ணெய் ஊற்றி வாணொளி காய்ந்த பின் பட்டர் சேர்த்து அரைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் சீரக வகைகளைக் கொட்டி கிண்டவும்.
- பிறகு, நறுக்கிய வெங்காயம், ஊசி மிளகாய்கள், தக்காளி பழங்கள் மற்றும் கறிவேப்பிலை போட்டு கிளறவும்.
- அடுத்து, எவப்போரேட் பாலை அடுப்பில் ஊற்றி கூடவே சோள மாவு கரைச்சலை 2 – 3 கரண்டி சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
- இறுதியாக, பட்டர் பால் கொதிக்கின்ற பொழுதினில் தேவையான அளவு உப்பு மற்றும் சீனி சேர்த்து பின் பொரித்த கோழி இறைச்சிகளை அடுப்பில் கொட்டி வேண்டும்.
- கோழி துண்டுகள் அத்தனையும் பட்டர் பால் கலவையில் ஒன்றி போகும் அளவுக்கு கிளறிட வேண்டும்.
- பின்னர், கிளறி எடுத்த எமிஸ் பட்டர் சிக்கனை தட்டில் எடுத்து வைத்து சோறுடன் உண்ண பரிமாறிடலாம்.