எழுத்தாளர் ரியா மூர்த்தி

by admin
120 views

உங்கள் பெயர்:

ரியா மூர்த்தி

வெளியிட்டிருக்கும் புத்தகங்கள்:

30

உங்கள் படைப்புகள் கிடைக்கும் இடம்:

பிரதிலிபி, அமேசான் கிண்டில்,  நோஷன்பிரஸ் & ஸ்ரீ பப்ளிகேஷன்

1. உங்கள் படைப்பிற்கான தேடலின் போது நீங்கள் கண்டறிந்த அல்லது கற்றறிந்த ஒரு புதிய விஷயம் என்ன?

மாந்திரீகன் நாவலுக்காக நிறைய பண்டைய கால விஷயங்கள் பற்றி தேடித்தேடி கற்றுக் கொண்டேன். அனைத்தையும் நாவலுக்குள் சரியான இடம் பார்த்து புகுத்திவிட்ட மகிழ்ச்சி இப்போதும் எனக்குள் உண்டு.

2. உங்கள் எழுத்தில் உருவான எந்த கதாப்பாத்திரத்தின் வழி தற்போதைய உலகத்தை நீங்கள் காண விரும்புகீறீர்கள்?! அது ஏன்?

ஆரவ் வழி, அது என் முதல் கற்பனை பாத்திரம். நிஜ உலகில் வாழும் ஒரு செலிபிரிட்டியை வைத்து எழுதியது. முப்பொழுதும் அவன் ரசிகையே நான். இதோ ஐபிஎல் வந்துவிட்டது, அவனும் வருவான்.

3. நீங்கள் எழுத யோசித்த அல்லது தயக்கம் கொண்ட எழுத்து வகை எது? காரணம் என்ன?

சோகமான முடிவுள்ள கதைக்களம். கதையோடு ஒன்றி விடும் வாசகர்கள் பெரும்பாலும் சோகமான முடிவுகளை விரும்புவதில்லை.

4. ரைட்டர் ப்லோக் (writer block) பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? 

முன்பு வாசிப்பினால், இப்போது ஆடியோ நாவல்கள் மூலம்… நிறைய எழுத்தாளர்கள் youtube சேனல் ஆரம்பித்து இருக்கிறார்கள். நானும் கூட… வீட்டு வேலை பார்த்துக் கொண்டே கதை கேட்பதற்கு சுலபமாக இருக்கிறது. ஏதோ ஒரு கட்டத்தில் நம் எழுத்தை தொடர்வதற்கான வழியும் கிடைத்து விடுகிறது.

5. எழுத்தாளர்களுக்கு இருக்க கூடாதென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?

தன் எழுத்துக்கள் மட்டுமே சிறந்தது என்ற எண்ணம். எழுத்துப் பிழையானாலும், கருத்துப் பிழையானாலும், எல்லாமே எழுத்துக்கள் தான். அது அவருடைய உழைப்பு. வீண் போக விடாமல் கதையை முடிப்பது அவருடைய பொறுப்பு. மற்றவர்களையும் எழுத விடுங்களேன்…

6. எழுதிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் எது? ஏன்?

காலை நேரம் மட்டுமே எழுதுகிறேன். ஆபீஸ், குழந்தைகள், வீட்டுவேலை என மற்ற நேரங்களில் என் ஷெட்யூல் ஃபுல்.

7. அப்படி உங்களுக்கொரு வாய்ப்பு கிடைத்தால், இதுவரை நீங்கள் படித்த சங்க இலக்கிய கதைகளில் (பொன்னியின் செல்வன்/ மஹாபாரதம்/ ராமாயணம்/ இன்னும் பல) எந்த கதையின் நடையை அல்லது ஏதாவது ஒன்றை அந்நாவலில் மாற்றி அமைத்திட விரும்பிடுவீர்கள்? அது ஏன்?

ராமாயணம். சீதையை தீக்குளிக்க சொன்னதுமே, இக்கால ஹீரோயின் போல கோபித்துக் கொண்டு வேறு நாட்டுக்கு போகும்படி எழுதியிருப்பேன்.

8. எங்கு உங்களின் கதை சார்ந்த விடயங்களை பற்றி யோசிப்பீர்கள்?

பால்கனி… பூச்செடிகளுக்கு நடுவே அமர்ந்திருக்கையில் மனது இலகுவாகிறது. கருவாய் கைக்கு கிடைத்த கதை, முழு நாவலாய் வளர்ந்துவிடும்.

9. எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?

தினமும் எழுதும் பழக்கம். கொஞ்சம் கேப் விட்டாலும் டச்சு விட்டு போயிடும். பார்த்துக்கோங்க மக்காஸ்.

10. நீங்கள் எழுதியதில் உங்களின் மாஸ்ட்டர் பீஸ் எது? ஏன்?

எல்லா கதைகளையும் மாஸ்டர் பீஸாகத்தான் நினைத்து எழுதுகிறோம். ரசிகர்களுக்கு பிடிப்பது சிலதே. என் வரையில் நேற்று, இன்று, நாளை எனும் நாவல்.

11. நீங்கள் எழுதியிருக்கவே கூடாதென்று நினைத்த உங்களின் ஒரு படைப்பு எது?

விழியோடு விளையாடு, நேரமின்மை காரணமாக் வேகமாய் முடித்துவிட்டேன். ஒன்று பொறுமையாக எழுதி இருக்க வேண்டும், இல்லையேல் எழுதாமல் இருந்திருக்க வேண்டும் எனும் யோசனை இப்போது வருகிறது.

12. எழுத்துத் துறையை பொறுத்த மட்டில் உங்களின் தாரக மந்திரம் என்ன?

போற்றுவது தூற்றுவது எதையும் தலைக்குள் வைத்துக் கொள்ளக்கூடாது. நமக்கு பிடித்ததை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

நன்றி. வணக்கம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!