1. உங்கள் நோக்கங்களில் தெளிவாக இருங்கள்
குறிப்பிட்ட இரு நபருக்கும் ஒரே தேவை இருப்பதையும், இந்நிலைப்பாட்டில் ஆர்வம் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுங்கள்
தனியாக ஓய்வெடுக்கக்கூடிய வசதியான மற்றும் பாதுகாப்பான இடமொன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. பாதுகாப்பான உடலுறவை பயிற்சி செய்யுங்கள்
பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் எதிர்பாராத நேரத்தில் கர்ப்பமடைதல் போன்றவற்றை தவிர்ப்பதற்கு பாதுகாப்பான உடலுறவை கையாளுங்கள்.
4. எல்லைகளை வரையறுத்து வெளிப்படையாக பேசுங்கள்
இருவரும் மற்றவருடைய ஆசைகளையும் எல்லைகளையும் மதிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. ஆரம்பிப்பதற்கு முன் சம்மதம் கேளுங்கள்
இரு தரப்பினரும் நேர்மறையான அனுபவத்தை பெறுவதற்காக, அனைத்து விடயங்களுக்கும் அனுமதி பெறுவது மிகவும் அவசியமாகும்.
6. நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் இருங்கள்
ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கும் போது அது சிறிது சிறிதாக நம்பிக்கையை ஏற்படுத்தும்.
7. கிடைத்த தருணத்தை அனுபவியுங்கள்
திறந்த மனநிலையுடன் உரையாடி குறிப்பிட்ட நேரத்தில் திருப்தி அடைவதன் மூலம் இச்சையர்பாட்டிற்கான முழுமையை அனுபவித்து மகிழ முடியும்.
8. நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருத்தல்
சந்திக்கும்போது தேவையானவற்றை நேரடியாக கலந்துரையாடுங்கள். அதை தவிர்த்து தேவையற்ற வாக்குறுதிகளை வழங்க வேண்டாம். அப்படி செய்யும் பட்சத்தில் அது தவறான புரிதலுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
9. அதிகப்படியான போதை பாவனையை தவிர்த்துக் கொள்ளுங்கள்
போதையை அளவாக எடுத்துக் கொள்ளும்போது அது பதற்றத்தை குறைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அதிகப்படியான போதை பாவனை தவறான முடிவுகளுக்குள் இட்டுச் செல்லக்கூடியவை.
10. சுகாதாரத்தை கடைபிடியுங்கள்
உங்கள் துணையின் எண்ணங்களில் உங்களைப் பற்றிய சரியான ஒரு மனநிலையை உருவாக்க, சுகாதாரத்தை பேணி சுத்தமாக இருங்கள்.
11. சாதாரணமான எதிர்பார்ப்புக்கள்
ஒரு இரவு மட்டுமே நீங்கள் உங்கள் துணையுடன் நேரம் செலவழிக்க போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
நீங்கள் அடுத்த நாள் பிரிந்து போவதற்கு கூட தயாராக இருக்க வேண்டும்.
12. பின்விளைவுகளை மதியுங்கள்
சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் உங்களுடன் இருப்பதை விரும்பவில்லை என்றால், அவர்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.
ஒரு நாள் மேட்டருக்கான டிப்ஸ் 😁
previous post