முதுகில் சொருகியிருந்த
முதல் கத்தியை
பிடுங்கிப் பார்த்தேன்
அன்பென்று எழுதியிருந்தது.
இரண்டாம் கத்தியை
பிடுங்கிப் பார்த்தேன்
அக்கரையென்று எழுதியிருந்தது.
தாளவியலாத வலியோடும்
காயங்களோடும்
குருதிச் சொட்ட சொட்ட
மூன்றாம் கத்தியை
பிடுங்கிப் பார்த்தேன்
பிரியமென்று எழுதியிருந்தது
பாதிப்புகள் உண்டாக்கும்
பகையை தவிர்க்கும் பொருட்டு
அதன் பிறகு தான்
இவ்வாழ்வில்
அன்பென்று நீட்டப்பட்ட யாவற்றையும்
சந்தேகக் கண்கொண்டு
பதற்றத்துடன்
பார்க்கத் தொடங்கினேன்.
©Arun kumar G