கறிவேப்பிலை-மிளகு-பூண்டு குழம்பு

by Admin 4
50 views

கறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு

🎀தேவையானவை:

🔸பூண்டு – 100 கிராம்,

🔸மிளகு, தனியா – தலா ஒரு டீஸ்பூன்,

🔸காய்ந்த மிளகாய் – 2,

🔸கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

🔸கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,

🔸கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,

🔸புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,

🔸உப்பு – தேவையான அளவு,

🔸எண்ணெய் – 100 மில்லி.

🎀செய்முறை:

🔹வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அரைத்துக்கொள்ளவும்.

🔹பூண்டினை தோல் உரித்து எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

🔹வாணலியில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

🔹இதில் வதக்கிய பூண்டு சேர்த்து, அரைத்து வைத்ததையும் சேர்க்கவும்.

🔹பூண்டு வெந்ததும், கடுகு – உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!