எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
என் ஆருயிரே…! நாம் 4 வருடங்களாக ஒரே வகுப்பில் படித்து வருகிறோம். இன்னும் 3 மாதங்கள் தான் உள்ளது. நம் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும்.
உங்களுக்கு நன்கு தெரியும். நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் என்று. ஆனால் நீங்கள் மெளனம் சாதிப்பது எனக்கு புரிய வில்லை. எனக்கு திருமணம் என்று ஒன்று இருந்தால் அது உங்களுடன் மட்டுமே. இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நீங்கள் சாதி பார்க்க மாட்டீர்கள் என பரிபூர்ணமாக நம்புகிறேன். உங்களுக்கு நான். எனக்கு நீங்கள். இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். எப்படியும் ஒரு வருடத்திற்குள் வேலை கிடைத்து விடும் என மனதார நம்புகிறேன்.
மனம் விட்டு பேசுங்கள். நீங்கள் ரொம்ப கூச்ச சுபாவம் உடையவராக இருக்கிறீர்கள். நீங்கள் பேசினால் எனக்கு கேட்பதே இல்லை. அதனால் தான் இந்த கடிதம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன். பிடிக்க வில்லை என்றால் தயவுசெய்து சொல்லி விடுங்கள்.
நான் காலம் முழுவதும் பிரம்மச்சாரியாக இருந்து விட்டு போகிறேன். நான் வீட்டில் எல்லாம் சொல்லி விட்டேன். நீங்கள் என் வீட்டு முகவரிக்கே பதில் அனுப்பலாம்.
உங்களை என்றென்றும் காதலிப்பவன்..
பாபு
14-02-2025
பி. கு. : இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. அதில் கொட்டை எழுத்துக்களில்… எழுதி இருந்தது…
ஐ லவ் யூ..!!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.