கொலையை கண்டுபிடி

by admin 1
61 views

#bookreview #uketsu #strangepictures
இது ஜப்பானியர்களின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தை முன்னிறுத்தி புனையப்பட்ட மெர்டர் மிஸ்டரி வகையறா கதை ஆகும்.

உளவியல் மற்றும் திகிலூட்டும் விஷயங்கள் கதை நெடுகவும் இருப்பதால் இதை சைக்கலாஜிக்கல் த்ரில்லரிலான ஹாரர் என்றும் குறிப்பிடலாம்.  

நாவலின் அசல் மொழி ஜப்பான் மொழியாகும். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆந்தோலஜி (anthology) பாணியில் எழுதப்பட்டிருக்கும் குறுங்கதைகளின் மூலம் கொலைகள் நடக்கின்றன.

துப்பாக ஆங்காங்கே ஓவியங்களும் வரைப்படங்களும் கதையை நகர்த்துகின்றன.

முடிவில் உண்மைகள் அத்தனையும் ஒரே மையப்புள்ளியில் வந்து நிற்க, கொலைக்கான காரணமும் அதன் ரகசியமும் உடைப்பட்டு போகிறது.

🔥இதில் மிக முக்கியமான சுவாரசியம் யாதெனில், வாசிப்பாளர்கள்தான் துப்பறிவாளர்களாக மாறி கொலைகளுக்கான இன்வெஸ்டிகேசனை சுயமாக மூளைக்குள் நடத்திட வேண்டும்.

🔥ஆகவே, கிரைம் தில்லர் கதைகளை விரும்புவோர் தாராளமாக இந்நாவலை வாசித்து மகிழலாம்.

Original Writer: Uketsu (Japan)
Translator: jim riyon
English version: Strange pictures

#amydeepz #bookrecommendations #bookreading #booklover #Crime #Mystery #horror

You may also like

Leave a Comment

error: Content is protected !!