எழுத்தாளர்: சசிகலா விஸ்வநாதன்
காவிரி கரையோரம்
கண்டேன் ஒரு சிலை!
கை உடைந்த நிலையில்
திருமகள் கனிவு அணைப்பில்
உக்கிர நரசிம்மர்!
கடவுளை எவர்
சபித்தது?
சிதைத்தது?
உடைத்தது?
ஒரு கையறு நிலையில் சபித்தேன்;
கடவுளை;
தன்னைக் கூட பாதுகாக்கத் அறியா மூடன் என!
என்னையே நான் மன்னித்தேன்;
ஒரு கணத்தில்;
சிலையின் இயலாமை பொருட்டு.
சிதைவு சிலைக்கு மட்டுமா?
மானுட மதியிலா உதாசீனம்.
கண்டிக்கத் தக்கது.
உடைத்தது வெறி
கொண்ட மத மதம்.
தண்டனைக்குரியது.