சிலரை பார்த்திருக்கிறீர்களா தேவையான நேரத்தில் மட்டும் நம்மை நாடி வருவார்கள்.
அது பணமோ பொருளோ ஏன் அறிவாக கூட இருக்கலாம்.
இப்படியானவர்கள் பெரும்பாலும் அவர்களின் தேவை முடிந்த பின்னர் நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் கூட நம்மிடம் சொல்ல மாட்டார்கள்.
ஆனால், அவர்களின் இக்கட்டான சூழ்நிலையில் நாம் தான் அவர்களுக்கு பக்கபலமாக இருந்திருப்போம்.
அதையெல்லாம் மொத்தமாய் மறந்து மெத்தனமாய் நடந்து கொள்பவர்களை கொஞ்சம் கண்டறிந்து பழகிட முயற்சி செய்யுங்கள்.
உறவில் பரஸ்பர புரிதலைக் கொண்டு வர இயலாவிட்டாலும், நம்பிக்கை என்ற அடிப்படையில் துளிர்த்திருக்கும் நட்பையாவது காப்பாற்றிட முயற்சி செய்யுங்கள்.
சுயநலம் தேவையான ஒன்றுதான். ஆனால், அதுவே உங்கள் சுயத்தை தின்றிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
#amydeepz #selfishpeople #selfishness
சுயம் தின்னும் சுயநலம்
previous post