எழுதியவர்: ரங்கராஜன்
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒரே கூட்டம்.18 ஆண்டுகளாக நடந்துவந்த ஒரு வழக்கு இன்று நீதிபதி தீர்ப்பு அளிப்பதால் இவ்வளவு கூட்டம்.
வழக்கின் நிலவரம்.
சுமாராக 18 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு டவுனில் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த பாலன் என்ற சிறுவனை ஒரு மாருதி
ஆம்னில் வந்த நான்கு பேர் பாலனைத் தூக்கி வேனில் ஏற்றி வாயைத் துணியால் கட்டி, கைகளை பின்னுக்கு
கட்டி வேனில் ஏற்றி அழைத்துப்
போனார்கள், வண்டி போகும் வழியை நன்கு மனனம் செய்தான் பாலன்.
வண்டி ஒரு பாழடைந்த கட்டடத்தில் சென்றது .உள்ளே சென்றதும் அங்கே இருந்த ஒருவன் பாலனின் தந்தைக்குப்
போன் செய்து ரூ25/லட்சம் கொடுத்தால் தான் உன் மகனை
விடுவிப்பேன் என்றான்.
எதிர்முனையில் அவன் தந்தை
என்ன சொன்னார் என்று
தெரியவில்லை.போனில் பேசியவன்
டேய், பையனை உள்ளே உள்ள சேரில் கட்டி வை, சாப்பிட ஏதாவது கொடு என்று சொல்லி விட்டு ப்போய் விட்டான்.
அதன் பிறகு பாலனுக்கு
சாப்பிடக் கொடுத்து சாப்பிடச்
சொன்னான்,ஒரு மீசைக்காரன் பாலன் நன்றாக ஒவியம் வரைவான், வந்த வழி மாருதி வேன் அவனை அழைத்து வந்தவர்கள் அந்த போன் செய்தவன், எல்லோரையும் மனதில் வரைந்து கொண்டான்.
உடனடியாக அவனுக்கு
சாப்பாடு கொடுத்ததில் இருந்த பேப்பரை எடுத்து பாக்கெட்டில் இருந்த பேனாவால் ஸ்கெட்ச் போட்டு அங்கிருந்த ஜன்னல் வழியாக எவ்வளவு தூரம் முடியும் அவ்வளவு தூரம் வீசினான்.
இரவு முடிந்தது, மறுநாள் காலை,வேனில் பாலனை ஏற்றி பணம் வாங்க கூப்பிட்டுக் கொண்டு போனார்கள். அந்த இடம்
வந்ததும் பணம் வாங்க ஒருவன் கையில் துப்பாக்கியுடன் போனான்,
கொஞ்ச நேரத்தில் பாலன் கண் முன்னேயே அவன் தந்தையை சுட,அவரின் காலில் குண்டடிபட ,
சுற்றி மறைந்திருந்த போலீசார் கடத்தியவர்களை வளைக்க,அதில் இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்.
பாலனின் தந்தை
மருத்துவமனையில் சேர்க்கப்பட,
வீட்டுக்கு வந்த பாலன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே 15 நாட்களாகிவிட்டது.
அதன் பின் தான் ஏற்கனவே வரைந்த விவரங்களை மறுபடியும் வேறு பேப்பரில் வரைந்து, காவலரிடம் கொடுக்க, நீதிபதி அதைப்பார்த்து,
தப்பியோடிய இருவரை உடனடியாகப் பிடிக்க காவல் துறைக்கு உத்திர விட்டார்.
அந்த வழக்கு இன்று சுமார் 18 ஆண்டுகளாக நடந்து வந்தது இறுதி தீர்ப்புக்கான நிலை.
அரசு வழக்கறிஞர் வழக்கின் விவரம், கடத்தல் நடந்த இடம், சண்டையில்
பாலனின் தந்தைக்கு காலில் அடிபட்டு
குணமாக்க முடியாமல் மரணம், அந்த அதிர்ச்சியில் பாலனின் தாய்க்கு பக்கவாதம், இவ்வளவு இருந்தும், சிறுவன் நன்கு படித்து தேறி சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவுசெய்து, அரசு வக்கீலிடம் ஜூனியராகச் சேர்ந்து, இந்த வழக்கில் உதவி செய்தார்.
பாலன் சமர்ப்பித்த ஆதாரங்களைப் பார்த்த நீதிபதி ,வழக்கு நடக்கும் போதே அப்போதைய காவல் துறை நான் அதிகாரிகளிடம் ஏன் கொடுக்க வில்லை என்றதற்கு, நான் உடனேயே
கொடுத்தேன் அந்த அதிகாரி நடவடிக்கை ஏதும் எடுக்காததால், ஒரு வெறியில் சட்டம் படித்து நானே வழக்காட நினைத்தேன் என்றான் பாலன்.
நீதிபதி தன் தீர்ப்பில் கடத்திய 6 பேரில் இரண்டு பேர் மரணமடைந்ததால், 4 பேருக்கு ஆயுள்தண்டனை, தலா அபராதமாக இரண்டு லட்சம் விதித்து தீர்ப்பை எழுதினார்.மேலும் காவல் துறையினரையும் சாடி பையனின் சாட்சியங்களை வைத்து எப்போதே முடிக்க வேண்டிய வழக்கு 18 ஆண்டுகள் தேவையா என்றும் சம்பந்தப்பட்ட காவல் அதிகார மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.
சாட்சியம் இருந்தும் கூட வழக்கு தாமதமாக தீர்ப்பு யாரைக்
குறைசொல்வது .
முற்றும்.
📍 உண்மையாக நடந்த கதை கொஞ்சம் கற்பனை கலந்து எழுதியது.
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.