ஒவ்வாமையை (Allergy) அதிகப்படுத்தும் ஈசினோபில்ஸ் (eosinophils) எனப்படும் அணுக்கள் இரத்தத்தில் அதிகமாக இருந்தால் வீல் மற்றும் ஃபிளேர் எதிர்வினை (Wheal and flare reaction) ஏற்படும்.
லேசாக அரிப்பு ஏற்பட்டாலோ, சொரிந்தாலோ தடித்து, சிவந்து விடும்.
IgE எனப்படும் அலர்ஜி பரிசோதனை செய்து பார்க்கையில் கூட, அதன் அளவுகள் அதிகமாகவே இருக்கும்.
Eosinophils அதிகமாக இருந்தால் சளி, தும்மல், வீஸிங் மட்டுமல்ல அரிப்பும் ஏற்படும்.
இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
❌ தூசி
❌ புகை
❌ கடல் மீன், கருவாடு, நண்டு, இறால்
❌ நல்லெண்ணெய்
❌கிரீம்
#பகிர்வு
பின் குறிப்பு:
தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே. சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.