ஆஸ்திரேலியாவில் உள்ள ஹாரி பெர்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் 2020-ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வில், தேனீ விஷத்தில் உள்ள மெலிட்டின் (melittin) என்ற பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட அளவில், மெலிட்டின், புற்றுநோய் உயிரணுக்களின் சவ்வுகளை ஒரு மணி நேரத்திற்குள் அழித்துவிடுகிறது.
இந்த மெலிட்டின், ட்ரிபிள்-நெகடிவ் (triple-negative) போன்ற சிகிச்சையளிக்க கடினமான புற்றுநோய் செல்களைத் தேர்ந்தெடுத்து அழித்திடும். இது பக்ஷஆரோக்கியமான செல்களைப் பாதிப்பதில்லை.
தற்போதைய கீமோதெரபி மருந்துகளுடன் மெலிட்டினைப் பயன்படுத்தும்போது, கட்டியின் வளர்ச்சியை குறைப்பதில் அது இன்னும் சிறப்பாக செயல்பட்டது.
இந்த ஆய்வுகள் எலிகளின் மீதும் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. மனிதர்களுக்குப் பயன்படுத்தும் சோதனைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மெலிட்டினை மனித உடலுக்குள் பாதுகாப்பாக செலுத்துவது மற்றும் பக்கவிளைவுகள் இல்லாமல் கட்டிகளை அடைவதுதான் விஞ்ஞானிகளின் அடுத்த பெரிய சவாலாக உள்ளது.