புகை வளையங்கள் சுழலும்
மனிதனின் பாதுகாப்புக் கோட்டையில்,
மரணத்தின் வாசலில் நான்
சுவாசத்தை மாற்றி அமைக்கிறேன்!
உன் கொசுவத்திச் சுருள்
என் வாழ்வின் அச்சம் அல்ல,
என் உயிரின் சுவாசப் புள்ளி!
உலகமே எனக்கு நச்சுப் புகைக்கூண்டாய் மாறினாலும்,
என் ஆயுதமோ முகமூடி அணிந்த ஒரு போர்வீரன்!
உன் விஷப் புகையை
நான் சுவாசிக்கிறேன்,
உன் எண்ணங்களை முறியடிக்கிறேன்!
இது என் போர்க்களம்,
நான் ஒரு நுண்ணுயிர்ப்படை வீரன்!
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
நான் ஒரு நுண்ணுயிர்ப்படை வீரன்!
previous post
