மூக்குக்கும் கண்களுக்கும்
யார் அழகு என்பதில் போட்டா போட்டி கண்களால் காதல் மொழி பேச முடியும் மூக்கால் பேச முடியுமா என்றது கண்
மூக்கு இல்லாவிட்டால்
மூச்சே இல்லையே என்றது மூக்கு
குறுக்கிட்ட உதடு உங்களைவிட நான்தான்
அழகு உதடுகள் சேர்ந்தால்தானே முத்தம் என்று சத்தமாக சொன்னது.
க.ரவீந்திரன்.