அடம் பிடிப்பது
உனக்கு வாடிக்கை..
நினைத்ததை முடித்து
நிதர்சனமாக்கிக் காட்ட
உன்னை மிஞ்சிட ஆளில்லை..
உறக்கத்தில் உளறிய
பிஞ்சு உதடுகள்…
ஆரம்பத்தில் ஏறுவதற்குப்
பயத்தால் நடுநடுங்க..
அழுக அழுக
ஏற்றிவிட
ஒய்யாரமாய் பயணிக்க…
சிறிது நேரத்திற்குள்
இறங்க மறுத்து
அடம்பிடிக்க
வலுக்கட்டாயமாக இறக்கி
சமாதானப்படுத்த வழிதேடி
விழிபிதுங்கி நிற்க
யானைமேல் யாரையாவது
உட்காரவைக்கும் ஆசை
இனிவருமா?
கேள்வியுடன் அங்கிருந்து
விடைபெற…
ஓயாத ஒலியாய்
யானை..யானை….
கத்திக் கத்திக்
குரல்வளை
கட்டக்குரலாய் மாற..
கண்களில் தூக்கம்
தூண்டப்பட
மௌனம்
மெல்ல மெல்ல
சிறகை விரித்தது…
விழித்தவுடன்
மீண்டும் தொடங்கினால்
சமாளிப்பது எப்படி?
ஆயிரம் கேள்விகள்
மனதில் எழ..
அடைக்கப்பட்ட கடைக்கதவை
திறக்கச் சொல்லி
ஆசைஆசையாய்
வாங்கி வந்த
யானை பொம்மை…
தனபாலதி ரித்திகா