படம் பார்த்து கவி: அடர்நிற திராட்சை

by admin 2
46 views

சிவப்பு ஒயின்…

அடர்நிற
திராட்சை ஊரல்
நிகரில்லா இன்பம்
பகருவர் கண்டவர்!

செங்கள்ளாயினும்
எந்த கள்ளாயினும்
மதி மயக்கும்
அதிகம் உண்டால்..
அளவோடு அருந்த
அளிக்குமாம் சில
நன்மைகள்..

அளந்து பாராமல்
அருந்தும் எதுவும்
அல்லவை தாம்..

மைசூரின் கூர்க் ல்
மணமோடு காபியும்
உண்டாம்…
மலர் போன்று
கிண்ணத்தில்
சிவந்த நற்சாறு
உபசரிக்கும்
உகந்த பானமாம்..

கள் அருந்தியே ஆக
வேண்டும் என
தவமிருக்கும்
குடிமக்கள் –இந்த
செங்கள் தேடியே
உடல்நலம் காக்க…

S. முத்துக்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!