சேவைக்காய் நெய்தது
தேவைக்காய் மாறி
பாவைக்குமென்றாகி
கோவை கலைந்த மணியாய்
சீர்கவை அழகும் சீர்குலைய
சீரற்றுப் போனதுவே நூற்கோவையும்…
கிழிசலைத் தைத்தவன்
தைத்ததைக் கிழித்திட
நவநாகரிக காலமென்பதா
இல்லை துணி துண்டானாலும்
பிணிப்பேய் பீடித்தவனால்
கன்னி களவாடப்பட்டாலும்
கலிகாலமென
எம்மாற்றத்தையும் ஏற்றுக்கடக்கும்
சமூக அலட்சியப்பார்வையின்
அடிக்கணையின் ஒரு துணுக்கு என்பதா!
புனிதா பார்த்திபன்