அடுக்களையில்
கரி படிந்த முகத்துடன்
எண்ணெய் பிசு,பிசுப்புடன் தான்
பெரும்பாலும் காணப்பட்டாள்
எத்தனை கஷ்டங்கள்
வந்த போதிலும்
அவள் உதட்டில்
புன்னகையில்லாமல் இருந்ததில்லை
மழை,வெயில்,குளிர் என
காலம் மாறி,மாறி வந்தாலும்
அவள் அன்னமிடும் நேரம்
மாறியதில்லை
எத்தனை பேர்
யார்,யாரையோ அழகி என
மாறி,மாறி சொன்னாலும்
கருப்பு நிறமுடைய
மனசெல்லாம் வெள்ளெந்தியாய் உள்ள
அவள் தான் என் தேவதை
அந்த தேவதை
அம்மா,காதலி,மனைவி,மகள் என
பல ரூபங்களில்
பல அவதாரம் எடுத்து
எனை காக்க
எனை சுற்றியே
கடவுளாய் உலவி கொண்டிருக்கிறது!
-லி.நௌஷாத் கான்-