நிறங்களின் கெஞ்சல் நீ
கள்ளங்கபடமில்லா
சின்னஞ்சிறு சிட்டுகளின்
சிங்கார நிறம் நீ..
அடுப்பங்கறைக்கு அஞ்சல் நீ
ஆம்
உனது
முகமில்லாமல்
முகவரி இல்லை..
புத்தாடைகளின் மகுடம் நீ
விழாக்களின் ஆதி நீ
மணத்தின் வாழ்வு நீ
புதுமனைக்கு சொந்தம் நீ
மொத்தத்தில்
அனைவரின் பந்தம் நீ…
ஆதி தனபால்
