அதிகாலை நேரம்
சாலையோரம்
வெள்ளோட்டமாய்
மெல்லோட்டம் போக
தேகம் கொஞ்சம் சூடாகும்
வியர்வை கொஞ்சம் வெளியேறும்
இரத்த ஓட்டம் சீராகும்
கூடு விட்டு ஜீவன்
ஓடிடாமல் தடுக்கும்
வாழ்வென்பதே
மெல்லோட்டம் போலே
இன்பதுன்பத்திற்கிடையே
நிலை தடுமாறாமல்
சீராக ஒரு ஓட்டம்
கூடு விட்டு ஜீவன்
ஓடும் வரை வேண்டும்
சர். கணேஷ்