ஆயிரம் ஜாலம்
செய்யும்
அதிசய விண்வெளி.
இரவில் பார்த்தேன்
அள்ளித் தெளித்த
விண்மீன்கள்…
ஆங்காங்கே
மறைத்து மிதக்கும்
மேகங்கள்…
முழு நிலவின்
மயக்கும்
ராஜாங்கம்….
இன்னொரு இரவில்
எங்கும் கருமேகம்..
வெளிச்சப் புள்ளிகள்
வெளிப்படவில்லை.
விடியலில் எங்கும்
வர்ண ஜாலம்
கதிரவன் வருகை
கட்டியம் கூறும்.
பகலவன் எழ எழ
வர்ணங்கள்
மறைந்து
எங்கும் நீல வானம்.
வட்ட நிலா
உதித்தெழ
பகலவன் விடைபெற
நீலக்கடல்
தங்கஜரிகை
ஒளிக்கீற்றுகளால்
நடனமாட
மஞ்சள் நிலா
தண்மையினால்
நிலமகள்
பேதலிப்பாள்…
உயிரினம் கிறங்க
கவிகள் ஆயிரம்
கானம் கோடி –என
விண்வெளிக்கோர்
ஆராதனை…
S. முத்துக்குமார்
