படம் பார்த்து கவி: அதிர்ஷ்டக்கரான்

by admin 1
115 views

அசுத்தக் காற்றையும்
அச்சுருத்தும் கதிர்வீச்சையும்
ஆலகால விஷமுண்ட
நீலகண்டனாய் நின்
அகன்ற பச்சையுடலில்
ஆழப்புதைத்து,
அகிலம் காக்கும்
அரியவன் கருணைபோல்
அடைக்கலம் ஈன்ற
அகத்தினருக்கு
அமுதக் காற்றையும்
அமைதிநல்கும் நன்மறையும்
நவின்று நல்லுடல் பேணி
ஆர்பாட்டமற்ற
எளிமைத் தளிராய்
தண்ணீரிலும் தழைத்து
திசையெங்கும்
மகிழ்விசை மீட்டும்
நீ அகம்தனில் படர்வதில்
யாமன்றோ அதிர்ஷ்டம் கொண்டவன்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!