அனைவரும் விரும்புவது பரிசு
ஆசையுடன் பெறப்படுவது பரிசு
இன்முகத்துடன் கேட்பது பரிசு
ஈடில்லா மகிழ்ச்சி தருவது பரிசு
உள்ளம் வெளிப்படுத்துவது பரிசு
ஊக்கம் தருவது பரிசு
எதுவாக இருந்தாலும் பரசு
ஏற்றம் தருவது பரிசு
ஐயத்தை தீர்ப்பது பரிசு
ஒவ்வொரு விடியலும் பரிசு
ஓதுவதே சிறந்த பரிசு
ஔவை வழி நடப்பது பரிசு
அஃதே நம் வாழ்க்கை சிறக்க
கிடைத்த பரிசாக போற்றுவோம்! பரிசு கொடுப்பது சிறப்பு என்றால் அதை பெறுவதும் சிறப்பு நன்றியை பலருக்கும் பரிசாக கொடுத்து ஊக்கப்படுத்துவோம்!
உஷா முத்துராமன்