அன்பு கூட
வம்பாய் மாறும்
பாசம் கூட
வேசமாய் தெரியும்
நேசம் கூட
நெருக்கடிகாய் தோன்றும்
கசக்கும் வேப்பிலையின்
மகத்துவம்
மானிடர்களுக்கு புரியாது
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தம் கூட
நஞ்சு தான்
கேட்காத வரை
எதையும் கொடுக்காதே
தானே சென்று
கொடுக்கப்படும் பேரன்பு கூட
இங்கு மதிக்கப் படாது
இது தப்பில்லை என உணர்ந்தால்
நீயும் சக மனுசனாய்
சந்தோசமாய் வாழலாம்
அறம் இதுவல்ல என
அகத்தில் மட்டுமில்லாமல்
புறத்திலும் பேசினால்
இப்பிரபஞ்சம்
உன்னை அடுத்த கருவேப்பிலையாய்
பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறதென அர்த்தம்!
-லி.நௌஷாத் கான்-
