வானுயர்ந்த சோலையை
இரசித்த பருவம் மாறி
வான் நோக்கிய கட்டிடங்களாக இன்று…
பூஞ்சோலை நினைவுகள்
உணர்வு பூக்களாய்
பூத்துக்குலுங்கிய பருவம் மறைந்து
புகையும் மாசடைந்த சூழலும்
மனிதம் மறைந்த மக்குகளாக
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி
பெறும் அச்சுறுத்தலாய் நிற்கிறது…
ஆம்…
அனைத்துமே இருக்கிறது..
அன்பை தவிர..
வாழ்வின் பயணம்
நிதர்சனம் இழந்து
எதை நோக்கி செல்கிறதோ…?
✍️அனுஷாடேவிட்