அன்பை பரிமாறுவதற்கு
பெற்றோர் வரை உறவினர் வரை காதலர்கள் கூட உன்னை தான் தேர்ந்தெடுப்பார்கள்…
நீ அன்புக்கான அடையாளம் கூடவே நோய்களை கொண்டு வரும் ஆபத்தும் நீ…
உன்னை தினம் குழந்தைகள் சுவைத்தால் பல் சொத்தையாவது உறுதி…
பெரியவர்கள் சுவைத்தால் சக்கரை நோய் உறுதி
அன்பின் அடையாளமும் நீயே
ஆபத்தின் அறிகுறியும் நீயே
எதிலும் நன்மை, தீமை
உண்டு என்பதற்காக
அடையாளம் நீ….!
(மிதிலா மகாதேவ்)