வெற்றிலை போட்ட
பாட்டியின் பல் போனதால்
குட்டி உரலும் உலக்கையும்
எட்டிப் பிடிக்க வெற்றிலையை பொடியாக்க உதவியது
அன்று ……..
சுற்றும் உறவினருக்கு
கற்ற பேத்தி தன் தயாரிப்பில் ஏற்றமுடன் செய்த இனிப்பின்
சுவை கூட்ட ஏலக்காய்
பொடி செய்ய உதவிய
குட்டி உரலும் உலக்கையும்
இன்று உணர்கிறோம் .
என்றுமே இது பயனுள்ளதால்
வென்று வாகை சூட உதவுமே!
உஷா முத்துராமன்