அன்றைய நாளில்
அத்தனை மாதரும்
அழகு நெற்றியில்
அம்சமாய் வைத்திட்ட
அரிசனமே அறிவிக்குமே
அவளை அணுகாதே
அவள் உனக்கானவளில்லை
அடுத்தவன் உரிமையென
ஆடவரும் பெண்டிரும்
அடுத்தவர் மேல்
அவசியமிலா இச்சையடையாதிருக்க
அரணெனவே இருந்ததுவே!!
அரிசனமெனும் குங்குமம்
ஜே ஜெயபிரபா