அரூபி எனும் அருபி
கவியில் சுவைத்து,
கதையில் திளைத்து,
கற்பனையில் கதைத்து,
உழன்ற
பாமரனையும்,
படம் பார்த்து,
கவி சொல்ல கவியாக்கிய
அரூபியே!
என் இனிய தோழியாகி,
என் திறனை
எமக்கு உணர்வித்து, எம் உணர்விற்க்கும் உயிர்கொடுத்து,
பலரரிய செய்த உமக்கும்,
உலகம் முழுமைக்கும் வாய்ப்பளித்த,
உம் தளத்தை
காத்து, பராமரித்து வரும் அனைத்து வேள்வியாளருக்கும்
நன்றி! நன்றி!
சுஜாதா.
படம் பார்த்து கவி: அரூபி எனும் அருபி
previous post