மானுடத்தின்
வலிமைக்கு உருவகமாகிப்போன
உருவம்..
களத்தில்
ஒத்தைக்கு ஒத்தையாய்
ஒண்டியாய் நிற்றலும்
விளையாட்டெனத்
தெரியாமல்
களமிறங்கும்
காளைகளுடன்
ஆம்
மனிதக் கட்டிளங் காளைகளுடன்…
உதிரம் சிந்தி
உயிரைத் துச்சமென நினையாது
வீரத்துடன்
ஆர்ப்பரிக்கும்
வீரனை
கண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்
தட்டிக் கழித்து
மிரட்டிச் செல்லும்
சாதுர்யம்
உனைப் போல்
யாருக்குண்டு…
தமிழனின்
பாரம்பரியத்தின்
அடையாளமாகிப்போன
அர்த்தமுள்ள
சொந்தம் நீ…
ஆதி தனபால்
