அழகாக அடுக்க வைத்து
வரிசையாக நிற்க கற்றுக்
கொடுக்கிறய் !
கதவுகளால் மூடிக்கொண்டு
பாதுகாக்க கற்றுக்கொடுக்கிறாய் !
அடுக்குகளை மாற்றியமைத்து
மாற்றத்தை ஏற்க கற்றுக் கொடுக்கிறாய் !
பழையப் பொருட்களை சேர்த்து
வைத்து
சேமிக்க கற்றுக் கொடுக்கிறாய் !
தேவைக்கு சாவிட்டு திறந்து
தேவைக்கு வாய் திறக்க கற்றுக்கொடுக்கிறாய் !
ஆரம்பரப் பொருளாய் நின்று
அழகாய் வாழக் கற்றுக்கொடுக்கிறாய் !
இத்தனையும் கற்றுக் கொடுத்த நீ
அதிகமாக வளர்ந்து
செலவுகளை கற்றுக் கொடுப்பது ஏனோ?!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்