படம் பார்த்து கவி: அழகான ஓவியம் வரைகிறது

by admin 1
16 views

வண்ணங்களின் உலகத்தில்
என் கனவுகளைத் தீட்டிட
வந்தது ஒரு எழுதுகோல் கூட்டம்.
கூர்மையாக்கிட,
கூர்மையாக்கிட,
வலிகள் இருந்தும்
மலர்களாய் மாறுகின்றன.
நிறங்கள் அதன் இதழ்கள்,
ஒவ்வொரு பூவிலும்
ஒரு புதிய கதை.
வானத்தின் நீலத்தை
அதன் இதழ்களில்
தேக்கி வைத்து
அழகான ஓவியம் வரைகிறது எழுதுகோல்..
உன் வாழ்வில் உள்ள
கூர்மையான வலிகளும்,
வேதனைகளும்,
ஒருநாள் மலர்களாக
மாறும்.
வாழ்க்கை ஓவியம்
என்றும் அழியாது,
வண்ணங்கள் மாறினாலும்
வாழ்க்கை ஓவியம் என்றும் இருக்கும்!

இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!