1.அழகியின் காதலை ஊரே அசைபோட்டது அம்மிக்கல்லில் சிதறிய அரிசியாய்
அவளோ இறந்து விட்டாள் அவள் காதலோ அரிசியாய் சிதறி அனைவர் வாயிலும் மற்றோர் காதிலும் புழுங்குகிறது…
- சமைத்திட பூண்டு விழுது அரைத்திட வந்தவள் அம்மி அரைக்கும் சாக்கில் என் மனதில் ஆலம் விழுதாய் வளர்ந்தாள் காதலால்…
- நீ அம்மி அரைக்கும் சப்தம் என்னையும் ஆக்குகிறது கவிஞனாய்…
- கோவத்துகென்று ஒரு வகை
மகிழ்ச்சியில் ஒரு வகை ஆசையில் ஒரு வகை அக்கறையில் ஒரு வகை என உன் அம்மி அரைக்கும் சத்தம் கூட சாதகமாய் மாறுகிறது நீயும் இசைக்குயிலாகிறாய்…
கங்காதரன்