சிக்கலான தோற்றம்
சிறுவர்களுக்கு பிடித்தவள் /
காய்கறிளுடன் பயணிப்பாள்
கண்ணுக்கு இனியவள்/
காதலுடன் பார்க்கும்
கல்லூரி மாணவன் /
என்னருமை நூடுல்ஸ்
என்றும் பிரியமானவள்/
நொந்தவன் புலம்புகிறான்
நொந்து நூடுல்ஸ்
ஆனேன் என்று /
சிக்கிக் கொண்டவன்
சிக்கலை
விடுவிக்க/ வழியுண்டு பாரீர்
விழிப்புடன் செயல்பட்டால்//
ருக்மணி வெங்கட்ராமன்