அலறிய குழந்தையின்
ஆவல் புரியாமல்
இதுதான் காரணமோ என
ஈசனை வேண்டி
உடனே வாயில் ரப்பரை
ஊக்கத்துடன் சொருக
என்னவென்று புரியாமல்
ஏங்கிய பாலென எண்ணி
ஐயத்தை மறந்து
ஒழித்தது அலறலை
ஓய்ந்த குழந்தையின் அழுகைக்கு
ஔடதமாக உதவிய சிப்பரே
அஃதே என் நண்பன் என
சேயினை ஏமாற்றியதை அறியாமல் தாய் மகிழ்ந்தது உண்மை
உஷாமுத்துராமன்