அடிக்கும் வெயிலுக்கு
குளிர்சாதன பெட்டியில்
உருகாமல் இருக்கும்
குல்ஃபி ஐஸ்ஸை
உருகி,உருகி
உன்னோடு திண்ண ஆசை
உன்னை கிள்ளி
கொஞ்சி
முத்தமிட ஆசை….
நீ செல்லமாக கோபப்பட
ஆசை……
கோபப்பட்ட அடுத்த கனமே
கட்டித் தழுவ ஆசை….
உன்னை எப்போதும்
புன்னகை முகத்துடனே
காண ஆசை….
நீ பணி செய்யும்
ஓயாத நேரத்திலும்
செல்ல குறும்புகள் செய்ய ஆசை,
குட்டி வம்பு மூலம் சின்னதாய்
உன் கரங்களால் அடி வாங்கவும் ஆசை….
MADE FOR EACH OTHER என்று
ஊர் முழுக்க பேர் வாங்க ஆசை
ஒற்றை மிதிவண்டியில் உன்னை
முன் வைத்து
ஊர் முழுக்க சுற்ற ஆசை,
மனம் சலிக்க
செவி குளிர
ஓயாமல் உன் உதடு உளரும்
வேதங்களை கேட்க ஆசை….
அடை மழையில்
கும்மி இருட்டில்
ஒற்றை குடையில்
யாரும் இல்லா பாதையில் சென்று வர ஆசை,
ரயில் பயண
ஜன்னல் ஓரத்தில்
நம் இருவர் மட்டும்
பயணிக்க ஆசை,
தினம் தினம்
நீ பார்க்கும்
முக கண்ணாடியாய்
ஒரு நாள் மாற ஆசை….
படுக்கை அறையில்
தனியே நீ கட்டி பிடித்து உறங்கும்
TEDDY BEAR ஆக மாற ஆசை…
செல்லம்,அமுலு,BABY என
உன்னை செல்ல பெயர்கள் வைத்து
கொஞ்சிட ஆசை…..
ஆண் பெண் சமம் என்பதை
பேச்சில் மட்டும்
பீத்தாமல்
நீ வேலை செய்து களைத்திட
உன் கால் விரல் பிடித்து
சேவகம் செய்திட ஆசை….
கண்ணீர் என்ன என்பதை
நீ அறியாமல் செய்திட ஆசை…..
அழுகையை வரவைக்கும் வெங்காயத்தை கூட
அகராதியில் இருந்து அழித்திட ஆசை…
நீர் இன்றி அமையாது உலகு அது
வள்ளுவன் வாக்கு அதை
நீ இன்றி அமையாது என் உலகு என
மாற்றிட ஆசை…..
கல்லறை சென்றால் கூட உன்
கண்களை பார்த்து கொண்டே சாக ஆசை…..
-லி.நௌஷாத் கான்-