- ஆனந்த நடனம் *
உயிரில் கலந்த இசையும்
நடனமும் எல்லையில்லா
ஆனந்தத்தின் வெளிப்பாடு,!
நிழலானாலும் உணர்வுகளும்
உணர்ச்சிகளும் மில்வதில்லை
ஸ்பரிசத்தில் ஏது பாகுபாடு,!
விண்னை குத்தகை
எடுத்தார்போல் வர்ணம் தீட்டிய
ஓவியத்தில் கதிரவன் செம்மையாக
வீற்றிருக்க விண்ணில்
வலம் வரும்
மேககூட்டங்களுடன் பறவசத்தோடு
பறவைகளும் உலகை ரசிக்கின்றன,!
செங்கற்கள் இல்லா மாளிகைகள்
செங்குத்தாய் நிற்கின்றன,!
கண்ணாடி பிம்பம் போல்
நிழழும் நிஜமும் உயிரில் கலந்த
இசையில் ஒன்றோடு ஒன்றாகி
உயிரோடு உயிராகி
ஒட்டுமொத்த ஆனந்ததையும்
நடனத்தினால் பேரன்புபாய்
காண்கிறோம் ….
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)