ஆரோக்கிய ஓட்டம்
பசியோடிருப்பவன்
உணவுக்காக
ஓடுகிறான்….
உண்டு நிறைந்தவன்
உடல்நலம் பேண
ஓடுகிறான்…
எதிலும்
சீரான ஓட்டம்
நேரான வாழ்வு…
ஜாகிங் செய்வோர்
சில விதம்..
மருத்துவர் மிரட்டி
பயந்து ஓடுவோர்…
பழக்கப்பட்டு
தினமும் ஓடுவோர்..
அந்திம காலத்தில்
ஆனந்தம் விரும்புவோர்..
சீரான மூச்சும்
தேர்ந்த உடலும்
வேண்டுவோர்…
சீரான ஓட்டம்
(Jogging)
வழக்கப் படுத்திக்
கொள்வர்..
ஜாகிங்
கைக் கொள்வோம்
உடல் நலத்துடன்
மேன்மை
கொள்வோம்..!
S. முத்துக்குமார்