பாவம் இந்த பாகற்காய்
பார்பதற்கு அருவருப்பாய்
முதலை தோல் போலே
உருவம் பெற்று இருக்காய்
ஆறு சுவையில் ஒரு சுவை கசப்பு
பாகற்காயில் தான் அச்சுவை இருக்கு
நீரிழிவு நோய் குறைக்க மருந்து
பாகற்காயில் பலமடங்கு இருக்கு
வெச்சணமாய் பாகற்காய் பார்த்து
வெஞ்சினம் வந்தது எனக்கு
பாகற்காய் உண்டு வந்த வாய்க்கு
ஆழகால விசம் கூட இனிப்பாய் தானிருக்கு
